Tuesday, 4 October 2016

Nokia going to launch android mobile coming december

நம் அனைவருக்குமே தெரியும் - சிலர் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் - நோக்கியா மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தைக்கு திரும்புகிறது. கடந்த ஆகஸ்ட் மாத அறிக்கை ஒன்றில் நோக்கியா நிறுவனம் 2016-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நான்கு நோக்கியா ஆண்ட்ராய்டு சாதனங்களை தொடங்கப் போவதாக ஒரு நோக்கியா செயற்குழு மேற்கோள் காட்டி இருந்தது.


அதன் பின்னர், வெளியாகப்போகும் நோக்கியா கருவி சார்ந்த பெயர், பலவகையான அம்சங்கள் என பல முரண்பாடான வதந்திகள் கிளம்பின. அதில் முக்கியமாக ஆகஸ்ட் மாத இறுதியில், இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு சாதனங்கள் சார்ந்த செய்தி மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது அவைகள் நோக்கியா 5320 மற்றும் நோக்கியா 1490. அதனை தொடர்ந்து இப்போது, ஒரு புதிய நோக்கியா சாதனம் டி1சி என்ற பெயரில் வெளிவரலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளனநோக்கியா 5320 கருவியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 கொண்ட ஒரு ஹைஎண்ட் கருவியாக எதிர்பார்க்கின்ற நிலையில் டி1சி ஒரு இடைப்பட்ட நிலை கருவியாக தோன்றுகிறது. அதாவது இதில் அட்ரெனோ 505 ஜிபியூ கொண்ட குவால்காம் அக்டா-கோர் ப்ராசஸர் மற்றும் 3ஜிபி ரேம் உடன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் எதிர்பார்க்கபடுகிறது.
என்1 டேப்ளெட் மற்றும் இசெட் லான்ச்சருக்கான ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளம் என நோக்கியா ஏற்கனவே அதன் மறுபிரவேசத்தை தொடங்கி விட்டது மற்றும் எதிர்வரும் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஒரு பெரிய மாற்றத்தை சந்தையில் நோக்கியா நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment